3 மணி நேரத்தில் முடிய வேண்டிய டி20 போட்டிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசி முடிக்காமல் தாமதம் செய்வதால் சீசன் 3 தொடரில் எல்லா போட்டிகளுமே 4 மணி நேரத்துக்கு நீடிக்கிறது.வியூகம் அமைப்பதில் கேப்டன்கள் நேரம் எடுத்துக் கொள்வது இதற்கு காரணம். முதல் போட்டியில் தாமதமாகப் பந்துவீசியதால், கொல்கத்தா அணி கேப்டன் கங்குலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதே காரணத்துக்காக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் சச்சின், டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் கம்பீர், பஞ்சாப் கிங்ஸ் லெவன் கேப்டன் சங்கக்கரா ஆகியோருக்கும் தலா ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் களமிறங்கும் அணிகள், குறிப்பிட்ட நேரத்துக்குள் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசி முடிக்காமல் தாமதம் செய்வது தொடர் கதையாவது முற்றுப்புள்ளி வைக்க இந்த நடவடிக்கை ஆகும்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




