இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வெளிநாடு செல்கிறார் அழகிரி!

E-mail அச்செடுக்க
மத்திய உரம் மற்றும் இரசாயாணத் துறை அமைச்சர் மு.க. அழகிரி அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கிறார்.

மார்ச் மாதம் 21ஆம் தேதி தனது சுற்றுப் பயணத்தைத் துவங்கும் அமைச்சர் அழகிரி சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார். 11 நாள்கள் இந்த நாடுகளில் தங்கியிருக்கும் அவர், ஆஸ்திரேலியாவிலிருந்து பாஸ்பேட்டை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வார் என அரசுச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

மத்திய அமைச்சர் பொறுப்பேற்ற பின் மு.க. அழகிரி மேற்கொள்ளும் முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத் தக்கது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்