இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சம்மன் விவகாரம் - உச்சநீதிமன்றம் செல்கிறார் மோடி

E-mail அச்செடுக்க

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் குல்பர்கா குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற தீவிரவாத சம்பவத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான இஹ்ஸான் ஜாப்ரி கொல்லப்பட்டார். இது சம்பந்தமாக சிறப்பு புலனாய்வுத் துறை குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு இம்மாதம் 21ம்திகதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநில முதல்வருக்கு சிறப்பு புலனாய்வுத் துறை சம்மன் அனுப்பியது இதுவே முதல் முறையாகும்.இந்த சம்மனை எதிர்த்து பா.ஜ.க.வைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் கலுபாய் மலிவத்  என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மூலமாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். மலிவத்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் ஆவார்.

 

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்