அமெரிக்கா ஃப்ளோரிடா மாநிலத்தில், ஓர் ஆப்பிரிக்க மத குருவைப் பின்பற்றும் பக்தர்கள், அவரது வழிபாட்டு முறைப்படி நத்தையின் சளியைக் குடித்ததாக பக்தர் ஒருவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, எடை குறைந்து, வயிற்றில் கட்டி ஏற்பட்டுள்ளது.
அந்தக் குறிப்பிட்ட நத்தை ஆப்பிரிக்காவில் தென்படும் பெரியவகை நத்தையாகும். அது சுமார் 10 அங்குல நீளம் வளரக்கூடியது. மதகுரு சார்ல்ஸ் ஸ்டீவர்ட் (Charles L. Stewart) வனவிலங்கு அதிகாரிகள் விசாரனை செய்து வருகின்றனர். இந்தக் குறிப்பிட்ட நத்தை அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டதாகும். அது தனக்குத் தானே இனவிருத்தி செய்யும் வல்லமை உடையதென்றும், சாந்துக் கலவைகளையெல்லாம் உண்ணக்கூடியது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சார்ல்ஸ் இது குறித்து பத்திரிகைக்குக் கூறுகையில், தான் மக்களுக்கு ஏதும் தீங்கு புரிய நினைக்கவில்லை என்றும், அவரது மதம் நத்தைகளை மக்களைக் குணப்படுத்தும் சடங்குகளில் உபயோகப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




