இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இன்போசிஸ் நிறுவனத்திற்கெதிராக வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு

E-mail அச்செடுக்க

இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த விபரங்களை பைனான்சியல் எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கை வெளியிட்டு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுமார் 100 கோடி அளவிற்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விதிமுறைகளை மீறி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறியுள்ள அப்பத்திரிக்கை, இதனால் வருமான வரி துறையின் விசாரணைக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனை வன்மையாக மறுத்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, கிரிஸ் கோபால கிருஷ்னன், தங்களின் நிறுவனம்,அவ்வாறான செயல்களில் இறங்கியதுமில்லை, எதிர்காலத்தில் இறங்கவும் செய்யாது என கூறினார். தாங்கள் சட்டத்தையும், பொது மரபையும் மதித்து நடக்கும் முன்னனி நிறுவனங்களில் ஒன்று என்றும், தாங்கள் ஒருபோதும் சட்டத்திற்கு முரனான செயல்களில் இறங்கியதுமில்லை என திட்டவட்டமாக கூறினார்.

அதேபோல் இந்தியாவிலேயே, அதிகம் வரி செலுத்தும் நிறுவனங்களில் இன்போசிஸும் ஒன்று என்று குறிப்பிட்ட அவர், நடப்பு ஆண்டில் சுமார் 1180 கோடி ரூபாய் வரி முன்பணம் செலுத்தியுள்ளது என்றார்

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்