இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நாட்டிலுள்ள பழங்குடியினரின் எண்ணிக்கை

E-mail அச்செடுக்க

2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் 6லட்சத்து 51ஆயிரத்து 321 பழங்குடியினர் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 8கோடியே 43லட்சத்து 26ஆயிரத்து 240 பழங்குடியினர் வாழ்வதாகவும் இத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பழங்குடியினர் நல விவகாரத் துறை இணை அமைச்சர் துஷார் ஏ சௌத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவல் உள்ளது. 2004-05-ம் ஆண்டில் திட்டக் குழு நடத்திய ஆய்வில், தமிழகத்தின் நகர்ப்புறங்களில் வாழும் பழங்குடியினரில் 32.5 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள். கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பழங்குடியினர் 32.16 சதவீதம் பேர் ஆவர்.

நாடு முழுவதும் கணக்கில் கொள்ளும் போது இந்த விகிதாச்சாரம் நகர்ப்புறங்களில் 33.3 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 47.3 சதவீதமாகவும் உள்ளது என அமைச்சர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்