இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் துப்பாக்கி சூடு

E-mail அச்செடுக்க
பெங்களூரில் உள்ள பியாலுர் பகுதியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக அலுவலகம் (ISRO) உள்ளது. இங்கிருந்து தான் விண்வெளி ஆராய்ச்சி, செயற்கைகோள் அனுப்புதல் மற்றும் ஏவுகணை சோதனைக்கு அடிப்படை விஷயங்கள் உருவாக்கப்படுவது போன்ற முக்கிய பணிகள் நடந்து வருகிறது.
இங்கு இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சந்தேகத்திற்கிடமான நிலையில் இருவரை பிடித்து பாதுகாப்பு படையினர் விசாரித்தனர். ஆனால் அந்த மர்ம நபர்கள் பாதுகாப்பு படையினரை சுட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு சுட்டனர். ஆனால் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் அது சம்பந்தமான எந்த உறுதியான தகவலை இன்னும் தர முடியவில்லை.
இருவரும் பயங்கரவாதிகளாக இருக்குமா என்ற கேள்விக்கு இஸ்ரோ பாதுகாப்பு படையினர் உறுதியான பதில் எதுவும் அளிக்கவில்லை. நேற்று மும்பையில் உள்ள ஓ.என்.ஜி.சி., யில் தீயை கொளுத்தி போட்டு ‌பெரும் சேதம் ஏற்படுத்திவிருந்த பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதிகள் இலக்கில் ஐ. எஸ். ஆர். ஓ. கட்டடம் இருப்படதால் ஐ.எஸ்.ஆர்.ஓ. கட்டடம் உள்துறை கண்காணிப்பில் இருந்து வருகிறது. எனவே இங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான உறுதியான தகவல்கள் இன்னும் சரியாக வெளிவரவில்லை.
பெங்களூரில் உள்ள பியாலுர் பகுதியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக அலுவலகம் (ISRO) உள்ளது. இங்கிருந்து தான் விண்வெளி ஆராய்ச்சி, செயற்கைகோள் அனுப்புதல் மற்றும் ஏவுகணை சோதனைக்கு அடிப்படை விஷயங்கள் உருவாக்கப்படுவது போன்ற முக்கிய பணிகள் நடந்து வருகிறது.

இங்கு இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சந்தேகத்திற்கிடமான நிலையில் இருவரை பிடித்து பாதுகாப்பு படையினர் விசாரித்தனர். ஆனால் அந்த மர்ம நபர்கள் பாதுகாப்பு படையினரை சுட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு சுட்டனர். ஆனால் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் அது சம்பந்தமான எந்த உறுதியான தகவலை இன்னும் தர முடியவில்லை.

இருவரும் பயங்கரவாதிகளாக இருக்குமா என்ற கேள்விக்கு இஸ்ரோ பாதுகாப்பு படையினர் உறுதியான பதில் எதுவும் அளிக்கவில்லை. நேற்று மும்பையில் உள்ள ஓ.என்.ஜி.சி.ஐ தீ வைத்து ஏற்படுத்திவிருந்த பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதிகள் இலக்கில் ஐ. எஸ். ஆர். ஓ. கட்டடம் இருப்படதால் ஐ.எஸ்.ஆர்.ஓ. கட்டடம் உள்துறை கண்காணிப்பில் இருந்து வருகிறது. எனவே இங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான உறுதியான தகவல்கள் இன்னும் சரியாக வெளிவரவில்லை.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
நுனிப்புல்