இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

திருச்சி வருகிறார் ராகுல்!

E-mail அச்செடுக்க
காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்ச்சியூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நாளை புதன் கிழமை (17-03-2010) அன்று திருச்சி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியை வலவூட்டும் முயற்சியின் முதல்படியாய் நாடு முழுவதும் இளைஞர் காங்கிரசை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் ராகுல் காந்தி. இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களைச் சந்தித்து காங்கிரசில் சேருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்.

ராகுல் காந்தி இந்தியா முழுவதுமும் சுற்றுப் பயணம் மேற்கொண்டதை அடுத்து இளைஞர் காங்கிரசில் புதிதாக 12.5 இலட்சம்பேர் இணைந்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இளைஞர் காங்கிரசின் நிர்வாகிகளை மேலிடத்திலிருந்து நியமிக்காமல் உறுப்பினர்களே நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் விதமாய் இளைஞர் காங்கிரசுக்கு தேர்தல் நடத்தும் பணிகள் தற்போது முடுக்கிவிடப் பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் பணிகள் கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளைப் பார்வையிடுவதற்காக ராகுல் காந்தி நாளை திருச்சி வருகிறார். பிற்பகல் 1 மணிக்கு திருச்சி வந்தடையும் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அதன்பிறகு கார் மூலம் திருச்சி கண்டோன்மெண்டு ஓய்.எம்.சி.ஏ. கட்டிடம் அருணாச்சல மன்றம் மற்றும் காட்டூர் தேவேந்திரா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடக்கும் தேர்தலை பார்வையிடுகிறார். ஓட்டு போடுபவர்களிடம் கருத்துக்கள் கேட்கிறார். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

கல்லூரி மாணவர்களுடன், ராகுல்காந்தி கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஜோசப் கல்லூரி, உருமு தனலட்சுமி கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

2 மணி நேர நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு 4 மணிக்கு விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். திருச்சிக்கு நாளை ராகுல் காந்தி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்