இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளை தொடங்க ரூ.50 கோடி செலுத்த வேண்டும்.

E-mail அச்செடுக்க
வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் கிளை வளாகங்களை இந்தியாவில் தொடங்குவதற்கு அனுமதி வழங்கும் சட்ட மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த மசோதாவுக்கு, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து நிலுவையில் இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் அரசு செயலாளர்கள் அடங்கிய குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசீலனைக்குப்பின் சில மாற்றங்கள் செய்யப்பட்டு திங்கள் கிழமை (15-03-2010) அன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு எந்தவித மாற்றமும் இன்றி ஒப்புதல் வழங்கப்பட்டது.

"வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் கட்டுப்பாட்டு சட்ட மசோதா -2010" என்று இந்த மசோதா அழைக்கப்படும். இந்த மசோதா விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தனது கிளைகளை தொடங்க விரும்பும் கல்வி நிறுவனங்கள் முதலில் பிரதான வைப்பு நிதியாக ரூ.50 கோடி செலுத்த வேண்டும். இந்தியாவில் கல்வி கற்பிப்பது மூலம் திரட்டப்படும் கூடுதல் நிதி எதையும் அந்த கல்வி நிறுவனங்கள் திரும்பப் பெற முடியாது.

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக மாணியக் குழு போன்ற சட்டபூர்வ அமைப்புகளிடம் அந்த நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் ஆகும்.

இந்த பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற சந்தேகம் எழுந்தால், அவற்றை நிராகரிக்கவும் மசோதாவில் இடம் உள்ளதாக, மந்திரிசபை கூட்டத்துக்குப்பின், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்காக பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் காத்துக்கொண்டு இருந்தன. வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் இந்தியாவிற்கு வருவதால் நம்நாட்டு கல்வி தகுதி மேம்படுமா அல்லது தனியார் கல்வி நிறுவனங்களால் ஏற்கனவே வியாபரமாக்கப்பட்ட கல்வி, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இன்னும் அதிகம் வியாபரா மயமாக்கப்படுமா? என்பது கேள்விக்குறி.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்