புகழ்பெற்றவர்கள் மற்றும் இளம் துடிப்பு மிக்கவர்கள் என அலசி பா.ஜ.க.வின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வசுந்த்ரா ராஜே, ஹேமாமாலினி, வருண்காந்தி, அர்ஜுன் முண்டா, ஆனந்த்குமார் , என பட்டியல் நீளுகிறது. இந்த புதிய நிர்வாகிகள் மூலம் கட்சி மேலும் பலம் வலுவடையும் என பா.ஜ.க நம்பிக்கை தெரிவித்துள்ளது.இன்று நிதின் கட்காரி வெளியிட்டுள்ள புதிய நிர்வாகிகள் பட்டியலில் கட்சியின் பொதுசெயலர்களாக ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்த்ரா ராஜே, அனந்த்குமார், விஜய்கோயல், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் அர்ஜூன் முண்டா, ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான், ஆகியோர் பொது செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பீயுஷ் கோயல் (பொருளாளர்), ஹேமாமாலினி , நஜ்மா ஹெப்துல்லா, பி.எஸ்.கோஷ்யாரி, கல்ராஜ் மிஸ்ரா, முக்தர் அப்பாஸ் நக்வி, சாந்தகுமார் ஆகியோர் துணை தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வருண் காந்தி, ஸ்மிருதி இராணி, முன்னாள் கிரிகெட் வீரர் நவஜோத் சிங் சித்து, ஆர்.பி, மெக்ரா, சந்தோஷ் கங்குவார் ஆகியோர் செயலர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
பா.ஜ.க, செய்தி தொடர்பாளர்களாக தருண்விஜய் ஷானவாஸ் ஹூசேன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் நாட்டை சேர்ந்த எச். ராஜா., லலிதா குமாரமங்கலம் ஆகிய இருவரும் நிர்வாக குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேனகா மகன் வருணுக்கு செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது இவர் ராகுலுக்கு எதிராக ஈடு கொடுக்க கட்சிக்கு பயன்படுவார் என பா.ஜ.க கூறியுள்ளது.
ஆனால் இந்த பட்டியல் நிதின் கட்காரின் ஆலோசனை படி அமையவில்லை என்றும், பா.ஜ.க வின் தாய் கழகமான ஆர்.எஸ்.எஸ். கட்டளைப்படி தயாரிக்கப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
நிதின் கட்காரி பட்டியல் வெளியிடுவதற்கு முன் ஆர்.எஸ் எஸ். தலைவர்களை சந்திந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்திக்கு எதிராக செயல்பட்டு மீண்டும் உத்திர பிரதேசத்தை கைப்பற்றவே வருந காந்திக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முஸ்லீம்களுக்கும் முக்கிய பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க முன்னாள் தலைவரை கடுமையாக எதிர்த்த வசுந்தராஜேக்கும், அத்வானி ஊசிப்போன ஊறுகாய் என்று வர்ணனை செய்த மனோகர் பாரிக்கரருக்கும் முக்கிய கொடுக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




