கேள்வி நேரத்தில் மாயாவதிக்கு பல கோடி மதிப்புள்ள ஆயிரம் ரூபாய் நோட்டு மாலையால் கூச்சல் ஏற்பட்டு குழப்பமானதால் மக்களவைத் தலைவர் மீராகுமார் அவையை முதலில் பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைத்தார். மீண்டும் கூச்சல் ஏற்பட்டு குழப்பம் நிலவியதால் அவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதிக்கு லக்னெளவில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் 25ஆம் ஆண்டு மாநாட்டில் அணிவிக்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள ஆயிரம் ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கப்பட்டது.
பல கோடி மதிப்புள்ள மாலைக்கான பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங்கும், காங்கிரஸ் எம்பி ஜகதம்பா பாலும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர்களை பகுஜன் சமாஜவாதிக் கட்சி எம்பிக்கள் முற்றுகையிட்டனர். இதனால் மீராகுமார் அவையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மாலையின் மதிப்பு 2 கோடி இருக்கும் என்று எதிர் கட்சியினர் புகார் கூறியதை அடித்து மாநாட்டில் செய்யப்பட்டிருந்த அலங்காரத்திற்கான செலவினங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




