பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அருகே மர்ம நபர்கள் இருவருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே செவ்வாயன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையும், எறிபடைத்துறையும் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளன.
செவ்வாயன்று அதிகாலை இஸ்ரோ மையத்தை ஒட்டியுள்ள பயலாலு எனும் இடத்தில் மர்ம நபர்கள் இருவர் நடமாடியிருக்கின்றனர். அவர்களது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவ்விருவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் பிடிக்க முயன்றனர். அப்போது, அவ்விருவரும் பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டனர். அதை அடுத்து, அவர்கள் மீது பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆயினும், அவ்விருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிவிட்டதாகத் தகவல் வெளியானது.
பாதுகாப்புப் படையினர் சுட்டதற்கான தடயம் எதுவுமே தென்படவில்லை என்று காலல் துறை தெரிவித்துள்ளது. எட்டு முறை சுட்டதாகப் பாதுகாப்புப் படை அதிகாரி கூறியிருந்தார். அதில் ஆறு குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் கமல் பந்த் தெரிவித்துள்ளார்.
இது தீவிரவாத செயலாக இருக்க முடியாது என்று போலீஸார் தரப்பில் தெரிவக்கப்படுகிறது. ஆயினும் நகர் முழுக்க காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




