பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைக் கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே சண்டை மூண்டதை அடுத்து சிறை வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் அதிக அளவில் செல்ஃபோன் பயன்படுத்துவதாக வந்த தகவல்களை அடுத்து காவல் துறையினர் அதனைக் கண்டித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறைவாசிகள் ரகளையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கைதிகள் காவல் துறையினரைத் தாக்கியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. மேலும் இதன் தொடர்ச்சியாக சிறைவாசிகள் புதன் கிழமை (17-03-2010) அன்று உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாளையங்கோட்டை மத்திய சிறை பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




