சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி சுமார் 7 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக சினிமா இயக்குநர் ஒருவரை சென்னை தேனாம்பேட்டை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.சில மாதங்களுக்கு முன் முன்னணி நாளிதழ்களில் மணப்பாறையைச் சேர்ந்த அர்விந்த ஜி மேத்தா (வயது 32) என்பவர் சென்னை தியாகராய நகர் ஹபீபுல்லா சாலையில் நடிப்பு பயிற்சிப் பள்ளி வைத்திருப்பதாகவும் நடிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்தப் பயிற்சிப் பள்ளியில் சேருமாறு விளம்பரம் செய்திருந்தார்.
இந்த விளம்பரத்தைப் பார்த்து பலரும் அர்விந்தை தொடர்பு கொண்டனர். தாம் இயக்கவிருக்கும் படத்தில் முக்கிய வேடம் தருவதாகப் பலரிடமும் கூறி பெரும் தொகையை வசூலித்துள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த ரீட்டா என்பவரிடமிருந்து அவரது மகளை கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக சுமார் 5.9 இலட்சம் ரூபாய்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அரவிந்தின் சினிமா படப்பிடிப்பு சில காரணங்களால் நின்றுபோனது. இதனையடுத்து பணத்தைக் கொடுத்தவர்கள் திரும்பக் கேட்டபோது, அரவிந்தால் திருப்பித் தர இயலவில்லை.
பின்னர் ரீட்டா கொடுத்த புகாரை அடுத்து தேனாம்பேட்டை காவலர்கள் அரவிந்தை செவ்வாய்க் கிழமையன்று கைது செய்தனர். நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர், புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




