இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பிரபல சாமியார் கட்சி தொடக்கம் - அரசியலை சுத்தப்படுத்த போகிறாராம்.

E-mail அச்செடுக்க

விபச்சாரம், மோசடி, நடகைகளுடன் உல்லாசம் என வரிசையாக சாமியார்கள் மக்கள் மத்தியில் வேஷம் கலைந்து காவி சாயம் வெளுத்து வரும் வேளையில், மற்றொரு சாமியார் ஒருவர் கட்சி தொடங்கியுள்ளார். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்து 2020க்குள் வெளிநாட்டில் இருக்கும் இந்திய கருப்பு பணம் 300 இலட்சம் கொடியை மீட்டு இந்தியாவை வல்லரசாக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
பாபா ராம்தேவ், பிரபல யோகா பயிற்சியாளர். `யோகா குரு' என்று அழைக்கப்படும் இவர் மிக  பிரபலமானவர். அவர் நேற்று டெல்லியில் `பாரத் ஸ்வாபிமான்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
அந்த நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் " அரசியலை சுத்தப்படுத்துவதற்காக தான் கட்சியைத் தொடங்கி உள்ளேன். இந்த கட்சி, அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 545 தொகுதிகளிலும் போட்டியிடும். அதற்காக ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் 7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான உறுப்பினர்களைச் சேர்க்கப் போகிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் யார் எம்.பி. ஆக வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள்.
ஆனால் எனக்குப் பதவி ஆசை இல்லை. அதனால் நான் தேர்தலில் போட்டியிடவும் மாட்டேன், பதவியை ஏற்கவும் மாட்டேன்" என்றுள்ளார்.
மேலும், "வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.300 லட்சம் கோடி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்தால், இந்தியா விரைவிலேயே சூப்பர்பவர் ஆகி விடும். பொருளாதாரத்தில் இரண்டாவது வல்லரசாகி விடும்.இந்த கறுப்பு பணத்தை 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும். இதை வளர்ச்சிப் பணிகளில் முதலீடு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக ஆட்சி செய்கிறது. அதற்கு நிறைய பொறுப்புகள் உள்ளன.
மாயாவதி, பல கோடி ரூபாய் நோட்டு மாலையை ஏற்றுக்கொண்டது, கண்டிக்கத்தக்கது. ரூபாய் நோட்டுகளை ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, கழுத்தை அலங்கரிக்க பயன்படுத்தக் கூடாது.
நான் பெண்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவன். பெண்களுக்கு 33 சதவீதத்துக்குப் பதிலாக, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். பெண்கள், ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்ல. கொடிய குற்றங்கள் புரிந்து மரண தண்டனை பெற்றவர்களுக்கு ஜனாதிபதி கருணை அளிக்கக் கூடாது.
சுவாமி நித்யானந்தா நடவடிக்கைகள் ஏற்கத்தக்கதல்ல. காவித் துணியை கட்டியவர்கள், அனைவரும் சன்னியாசிகளாக இருக்க முடியாது. தான் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்திருப்பதும், பாலியல் கல்வி குறித்து தான் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்திருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நித்யானந்தாவுக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் சாமியார்களை தண்டிக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்" என்று கூறினார்.
விபச்சாரம், மோசடி, நடகைகளுடன் உல்லாசம் என வரிசையாக சாமியார்கள் மக்கள் மத்தியில் வேஷம் கலைந்து காவி சாயம் வெளுத்து வரும் வேளையில், மற்றொரு சாமியார் ஒருவர் கட்சி தொடங்கியுள்ளார். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்து 2020க்குள் வெளிநாட்டில் இருக்கும் இந்திய கருப்பு பணம் 300 இலட்சம் கொடியை மீட்டு இந்தியாவை வல்லரசாக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
பாபா ராம்தேவ், பிரபல யோகா பயிற்சியாளர். `யோகா குரு' என்று அழைக்கப்படும் இவர் மிக பிரபலமானவர். அவர் நேற்று டெல்லியில் `பாரத் ஸ்வாபிமான்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

அந்த நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் "அரசியலை சுத்தப்படுத்துவதற்காக தான் கட்சியைத் தொடங்கி உள்ளேன். இந்த கட்சி, அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 545 தொகுதிகளிலும் போட்டியிடும். அதற்காக ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் 7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான உறுப்பினர்களைச் சேர்க்கப் போகிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் யார் எம்.பி. ஆக வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள்.

ஆனால் எனக்குப் பதவி ஆசை இல்லை. அதனால் நான் தேர்தலில் போட்டியிடவும் மாட்டேன், பதவியை ஏற்கவும் மாட்டேன்" என்றுள்ளார்.

மேலும், "வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.300 லட்சம் கோடி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்தால், இந்தியா விரைவிலேயே சூப்பர்பவர் ஆகி விடும். பொருளாதாரத்தில் இரண்டாவது வல்லரசாகி விடும்.இந்த கறுப்பு பணத்தை 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும். இதை வளர்ச்சிப் பணிகளில் முதலீடு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக ஆட்சி செய்கிறது. அதற்கு நிறைய பொறுப்புகள் உள்ளன.

மாயாவதி, பல கோடி ரூபாய் நோட்டு மாலையை ஏற்றுக்கொண்டது, கண்டிக்கத்தக்கது. ரூபாய் நோட்டுகளை ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, கழுத்தை அலங்கரிக்க பயன்படுத்தக் கூடாது.

நான் பெண்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவன். பெண்களுக்கு 33 சதவீதத்துக்குப் பதிலாக, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். பெண்கள், ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்ல. கொடிய குற்றங்கள் புரிந்து மரண தண்டனை பெற்றவர்களுக்கு ஜனாதிபதி கருணை அளிக்கக் கூடாது.

சுவாமி நித்யானந்தா நடவடிக்கைகள் ஏற்கத்தக்கதல்ல. காவித் துணியை கட்டியவர்கள், அனைவரும் சன்னியாசிகளாக இருக்க முடியாது. தான் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்திருப்பதும், பாலியல் கல்வி குறித்து தான் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்திருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நித்யானந்தாவுக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் சாமியார்களை தண்டிக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்" என்று கூறினார்.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: ovaismaslahi, March 17, 2010
nithyanathtavai.tantippatu.mattum.alla.eni.yevanum.enta.tavara.seiyata,maturi,tantikkanum.seiumaatamil.arasu

கருத்து எழுதுக

busy
 
நுனிப்புல்