இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஜெருசெலம் அருகே யூத வழிபாட்டுஸ்தலம் ஃபாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம்

E-mail அச்செடுக்க

ஃபாலஸ்தீன்: கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்லாமிய புனிதஸ்தலம்(மஸ்ஜிதுல் அக்ஸா) அருகே உள்ள பழைய நகரில், யூத வழிபாட்டுஸ்தலம் ஒன்றை திறப்பதற்கு எதிராக ஃபாலஸ்தீன மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 

ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீன்(இஸ்ரேல்) காவல்துறை மீது கல்லை வீசியடிக்கும் ஃபாலஸ்தீன இளஞர்களை கட்டுப்படுத்துவதற்காக ரப்பர்குண்டை வீசும் துப்பாக்கி ஏந்திய ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) போலிஸார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஃபலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தால் கண்டனத்தை வெளிப்படும் நாளாக ஹமாஸ் அமைப்பால் பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தை முன்னிட்டு, காசாவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

கிழக்கு ஜெரூசலத்தில் குடியேற்றக்காரர்களுக்காக ஆயிரத்து அறுநூறு புதிய வீடுகளை அமைக்கும் இஸ்ரேலின் திட்டம் காரணமாக எழுந்த பதற்றத்தை அடுத்து அமெரிக்காவின் மத்திய கிழக்குக்கான தூதுவர் ஜோர்ஜ் மிச்சேல் அவர்கள், இஸ்ரேலுக்கான தனது விஜயத்தை ஒத்திவைத்துள்ளார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்