அளவுக்கதிகமாக மது அருந்தி தகராறு செய்த நபரை விசாரிக்க வந்த பெண் காவல்துறை அதிகாரியைத் தன் ஆணுறுப்பால் தாக்க முயன்ற நபருக்கு பிரிட்டன் நீதிமன்றம் 600 பிரிட்டிஷ் பவுண்டுகள் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.
பிரிட்டனில் உள்ள அபர்டீன் என்ற நகரில் வசிக்கும் லித்துவேனியா நாட்டவரான மரியம் வரினவுஸ்காஸ் என்பவர் அடுக்குமாடிக்கட்டிடத்தில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். சென்ற நவம்பர் 15 அன்று தன்னுடைய காதலியுடன் இவ்வீட்டில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டுத் தகராறு செய்ததாகத் தெரிகிறது. இதனால் கலவரம் அடைந்த அவரது காதலி காவல்துறையின் உதவியை நாடினார்.
இது குறித்து விசாரிக்க வரினவுஸ்காஸின் வீட்டிற்கு வந்த பெண் காவல் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென எழுந்து நின்ற வரினவுஸ்காஸ் தன் கீழாடையைக் களைந்து தன்னுடைய ஆணுறுப்பை பெண் அதிகாரியின் முகத்தை நோக்கிக் கொண்டுவரும் போது அந்த அதிகாரி விலகி ஒதுங்கியதால் தாக்குதலில் இருந்து தப்பிவிட்டார்.
இவ்வழக்கை விசாரித்த அபர்டீன் நீதிமன்றம் வரினவுஸ்காசுக்கு 600 பவுண்டுகள் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.

எழுதியவர்: abumubeen, March 19, 2010
| < முந்தையது | அடுத்தது > |
|---|




