இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இஸ்ரோ முன் துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை : கர்நாடக அரசு!

E-mail அச்செடுக்க
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ அலுவலகம் முன் செவ்வாய்க் கிழமை (16-03-2010) அன்று துப்பாக்கிச் சூடு நடந்ததாக வெளியான செய்திகளை கர்நாடக மாநில அரசு மறுத்துள்ளது.

செவ்வாய்க் கிழமை காலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அலுவகம் அருகே அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டதாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கூறியிருந்தனர். இச்செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா பதில் அளித்தார். இஸ்ரோவின் கட்டடங்களுக்கு வெளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை. முற்கட்ட விசாரணையின்படி துப்பாக்கிச் சூடு எதுவும் அங்கு நடைபெறவில்லை என்று கூறினார்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஜாதவ் என்பவர் பணியில் இருந்தபோது செவ்வாய்க் கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற இருவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் அதனை அடுத்து தன்னுடைய துப்பாக்கியிலிருந்து எட்டு முறை சுட்டதாகவும் ஜாதவ் கூறியிருந்தார்.

நிகழ்விடத்திலிருந்து ஆறு தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ISDN வளாகத்தில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதற்கான எந்த ஒரு அடையாளமும் அங்கு இல்லை என்று ஆச்சார்யா கூறினார்.

மாநிலக் காவல்துறையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையும் கூட்டாக இணைந்து இது தொடர்பாக விசாரணை செய்து வருவதாகவும், இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அரசு செயல்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக இது தீவிரவாத தாக்குதல் என்பதை கர்நாடக காவல் துறையினரும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் செவ்வாய்க் கிழமையன்றே மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்