சென்னை: சாமியார் நித்யானந்தா நடிகை ரஞ்சிதா படுக்கை அறைக்காட்சிகள் கொண்ட வீடியோபடம் வெளியாகி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தனக்கு எதிரான சதி என்றும் விரைவில் அவற்றை சட்டத்தின் மூலமாக தகர்ப்பேன் என்றும் நித்யானந்தா கூறினார்.
இதற்கான ஆதாரங்களை சேகரிக்கும் முனைப்பில் சாமியாரின் மடத்தினர் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள். இதற்கிடையில் நித்யானந்தருக்கு எதிராக சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் கர்நாடக போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளன. கும்பமேளாவில் பங்கேற்று வரும் சாமியார் ஒரிரு தினங்களில் பெங்களூர் மடத்துக்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையில் ரஞ்சிதாவை சாமியாருக்கு எதிராக திருப்ப முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. வீடியோ படம் சம்பந்தமாக அவர் மேல் குற்றம் சுமத்தி சாட்சியம் அளிக்க வைக்கவும் எதிர் கோஷ்டியினர் திட்டம் வகுக்கின்றனர். ரஞ்சிதாவுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வருவதாகவும் செய்தி வெளியானது.
இந்நிலையில் ரஞ்சிதா திடீரென்று தலைமறைவானார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. தியாகராயநகரில் வீடு பூட்டி கிடக்கிறது. ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருப்பதாக கூறப்பட்டது. அங்கு தற்கொலைக்கு முயன்றார் என்றும் ஆந்திர இணைய தளங்கள் மற்றும் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.
அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் தேடினார்கள். யாரிடமும் சிக்கவில்லை. திடீரென்று அமெரிக்கா சென்றுவிட்டார். ரஞ்சிதாவின் சகோதரி வீடு உள்ளது. அங்கு சில நாட்கள் தங்கினார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். நித்யானந்தா ஆன்மீக மடத்துக்கு உலகம் முழு வதும் பக்தர்கள் உள்ளனர். சீடர்கள் மூலம் ரஞ்சிதாவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. காவி உடுத்திய சீடர்கள் சிலர் ரஞ்சிதா பாதுகாப்புக்காக உடன் செல்கிறார்கள்.
அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு ரஞ்சிதா பயணமானார். அங்கும் சீடர்கள் பாது காப்புக்காக சென்றனர். அவரை சுற்றி காவி உடை சீடர்களையே காண முடிந்தது. ரஞ்சிதா மட்டும் நாகரீக உடை அணிந்து இருந்தார். விரைவில் அவர் சென்னை திரும்புவார் என்று கூறப் படுகிறது. முழுநேர ஆன்மீக பணிகளில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

எழுதியவர்: செவத்தப்பா, March 18, 2010
| < முந்தையது | அடுத்தது > |
|---|




