சென்னை: சாமியார் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருக்கும் வீடியோ படம் தொலைக்காட்சியில் வெளியானது. இந்த படம் தங்களுக்கு எதிரான திட்ட மிட்ட சதி என்று இருவரும் மறுத்துள்ளனர்.
இந்நிலையில் நடிகைகள் ராகசுதா, ரோகினி போன்றோருக்கும் சாமியார் நித்யானந்தனோடு தொடர்பு இருந்ததாக செய்திகள் வரத்தொடங்கின. நடிகை கே.ஆர்.விஜயாவின் சகோதரி மகள் ராகசுதா. மற்றும் சமூக சேவை ஆர்வலராக உள்ள நடிகை ரோகினி. இவர் பி.டி.காய்கறிக்கு எதிராக போராட்ட முயற்சிகளை எடுத்தார். மேலும் மகளிர் மட்டும் விருமாண்டி, ஐயா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நித்யானந்தாவுடன் தனக்கு தொடர்பு இல்லை என்று ரோகினி மறுத்தார். நான் பெண்சிங்கம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். “நந்தலாலா” படத்தில் நடித்து முடித்துவிட்டேன். என்னை நித்யானந்தா சாமியாருடன் இணைத்து பேசுவது வருத்தம் அளிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவரை சந்தித்தது கூட இல்லை. ஆன்மீக சொற்பொழிவு கூட்டங்களுக்கும் போனதும் இல்லை என்று கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




