இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அரசு அலுவலகங்களில் மத விழாக்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

E-mail அச்செடுக்க
அரசு அலுவலகங்களில் எந்த ஒரு மதத்தின் விழாவும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையால் 1993ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசு உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை அமைய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

இதுதொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் இப்ராகீம் கலீபுல்லா மற்றும் வாசுகி ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம், இத்தகைய அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கும்போது, இந்த அரசு உத்தரவு முறையாக செயல்படுத்தப் படுகிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று கூறினார்கள். எனவே அரசு அலுவலகங்களில் சமூக அமைதியைக் காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்க வேண்டும். இதில் தவறு ஏற்பட்டுவிட சிறிய இடத்தையும் அளிக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறினார்கள்.

திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். அரசு அலுவலகங்களில் எந்தவொரு மதச் செயல்களும் நடைபெறுவதைத் தடைசெய்து மாநில தலைமைச் செயலர் மற்றும் அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறைச் செயலர் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி மனு செய்திருந்தார்.

இந்தத் தடை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கன்காணிப்பதற்காக தனியே ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்