இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சொர்க்கவாசல்?

E-mail அச்செடுக்க

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 'நவீனக் கலை' கண்காட்சிக்கான நுழைவு வாயிலை சொர்க்கவாசல் என்று சிலர் அழைப்பதாக நமது இந்நேரம்.காம் தளத்திற்கு செய்திகள் வந்துள்ளன. நுழைவு வாயிலில் உள்ளது என்னவெனில் "சிந்தனைக்கு எட்டாதது" (Imponderabilia) என்ற தலைப்பிடப்பட்ட கலை வெளிப்பாடாம். அது என்ன சிந்தனைக்கு எட்டாதது?

இரு பெண்கள் உடலில் துளியளவு துணியின்றி ஒருவரை ஒருவர் வெறித்த வண்ணம் மிக நெருக்கமாக நின்றபடி சிலையாக உறைந்தபடி உள்ளனர். அவர்களுக்கு இடையே புகுந்து கண்காட்சிக்குள் ஜொள்ள (மன்னிக்க!) செல்ல வேண்டுமாம்.

இதை சொர்க்கவாசல் என ஏன் அழைக்கிறார்கள் என இப்போது புரிந்திருக்குமே!

கண்காட்சிக்கு வந்த ஒருவருக்கு அவர்களின் காலை மிதிக்காமல் போவது சிரமமாக இருக்கிறதாம்; இன்னொருவருக்கு என்ன இது ஆடையில்லாமல்? 'ஷேம் ஷேம்' என்று இருக்கிறதாம்.

அதுமட்டுமில்லை; கண்காட்சியின் உள்ளே இருப்பவற்றில் சில:

இரு பெண்கள் (உடையுடன் தான்) தங்களின் விரல் நுனிகளைத் தொட்டபடி உள்ளனர். இரு பெண்கள் தங்கள் முடியைப் பின்னியபடி ஒருவர் முதுகில் இன்னொருவர் முதுகை வைத்து சாய்ந்த படி சிலையாக உள்ளனர்.

நிர்வாணமாக இருக்கும் இன்னொரு பெண் மீது ஓர் எலும்புக்கூடு மாதிரி கிடக்கிறது.

இந்தக் கண்காட்சியை நடத்தும் கலைஞானியின் பெயர் மரினா அப்ரோமோவிக். இவர் இதே கண்காட்சியை 1977-இல் இத்தாலியில் நடத்த முயன்ற போது காவல்துறையினர் இந்தக் கலை வெளிப்பாடு அவர்களுக்கு அலர்ஜியாகிவிட்டது! நியூயார்க் நகரக் காவல்துறையினர் மிகவும் கலைநயம் மிக்கவர்கள் போலும்! அவர்களுக்கு இது பெரிதாகத் தெரியவில்லை.

63 வயதாகும் இந்த அற்புதக் கலைஞர் மயக்கம் தரும் மருந்தை உட்கொண்டு தன் இடதுகையைக் கத்தியால் குத்திக் கொண்டாராம். என்னே அற்புதமான கலை!

வரும் மே மாதம் 31 வரை நியூயார்க்கில் இக்கண்காட்சி நடைபெறுமாம். நியூயார்க் செல்ல வாய்ப்புள்ளவர்கள் இக்கண்காட்சியையும் கண்டு கலை அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம்.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: S. MOHAMED THAMEEM, March 19, 2010
WHAT IS THIS? RECOMMENDING TO UPGRADE THE SENSE OF ART OF SUCH IDIOTIC? EVEN IF IT IS MEANT FOR JOKE, IT IS NOT GOOD,

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்