ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஈவ் டீசிங் அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்நிலையில் நாளுக்குநாள் இளம் பெண்களுக்கு ஏற்படும் கேலி, கிண்டல்கள் போன்ற ஈவ் டீசிங் தொந்தரவுகள் அதிகரித்து வருகிறது.
இன்று அனைத்து துறைகளிலும் சத்தமின்றி சாதித்து வரும் பெண்களை, ஒரு சில கயவர்கள் செய்யும் தொந்தரவால் பெண்களின் கல்வி மற்றும் தனித்திறன் பாதிக்கும் நிலையும் சத்தமின்றி உருவாகி வருகிறது. இதனால், ஒருபக்கம் பெண்கள் முன்னேற்றம் கண்டாலும், மறுபக்கம் அச்சத்தால் வெளியே வராமல் இருப்பதால், பெண்களின் முன்னேற்றம் தடைபட்டு வருகிறது. இதற்கு ராமநாதபுரம் பகுதியில் உள்ள பெண்கள் படும் அவலத்தை உதாரணமாக கூறலாம். அந்தளவு நகரின் முக்கிய பகுதிகளில் சில கும்பல்கள் காலை மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் பெண்களை ஈவ் டீசிங் செய்து வருகின்றனர்.
சிலர் ஒரு படி மேலே சென்று பெண்கள் வரும் நேரத்தில் மொபைல் போனில் ஆபாச படங்களை வைத்து கொண்டு பெண்களின் காதில் ஆபாச படங்களின் ஓசை கேட்கும்படி சீண்டுகின்றனர். இதனால், பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்கள் வெளியே சொல்ல முடியாத நிலையில் தலைகுனிந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. மாவட்ட தலைநகரிலேயே இந்த நிலை என்றால் மற்ற பகுதியில் மாணவிகள் படும் கஷ்டம் மிக மோசமானது. புகார் வந்தால்தான் நடவடிக்கை என்று காவல்துறை இருந்தால், இதுபோன்ற செயலுக்கு புகார் தெரிவிக்க யாரும் எளிதில் முன்வர மாட்டார்கள்.
எனவே ,பெண்களின் நலன் கருதி இதுபோல் பெண்களை ஈவ்டீசிங் செய்யும் கும்பலை ஒடுக்க பிரதீப்குமார் எஸ்.பி., அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தெருக்களில் காலை மற்றும் இரவு ஏழு மணிக்கு பெட்டி கடை, குட்டிசுவர் போன்ற இடங்களில் அமர்ந்து சாகசம் காட்டி வருபவர்களை சற்று எச்சரித்தாலே ஒரளவு ஈவ்டீசிங்கை குறைக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

எழுதியவர்: ovaismaslahi, March 18, 2010
எழுதியவர்: saleem, March 24, 2010
ராமனாத புரத்தை யாறும் எந்த அரசியல் வாதிகலும் கவனிக்கவில்லை அங்கு எந்த நலத்திட்டங்கலும் வறுவதில்லை சேது சமுத்திரம் வந்தாலாவது நாங்கல் நன்றாக இருப்போம் அதையும் வரவிடாமல் தடுக்கின்றனர் தமிழ் நாட்டிலே மிகவும் பின் தங்கிய மாவட்டம் ராமணாதபுறம்தான் அதற்கு யாறும் நற்பனி செய்ய முன் வருவதில்லை
ஆட்சி சமயத்தில் மட்டும் வந்து மக்கலை ஏமாற்றுகிறார்கள் என்ன செய்ய தலைவிதி
| < முந்தையது | அடுத்தது > |
|---|




