ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தன்னை காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது ஆசிட் ஊற்றி முகம், கண்களை சிதைத்த வாலிபருக்கு, ராசிபுரம் சார்பு நீதிமன்றம், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.
ராசிபுரத்தை அடுத்த மங்களபுரத்தை சேர்ந்தவர் சீமா (25). இவர் கடந்த 2008 ம் ஆண்டு நாமக்கல் அரசுக் கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ஆறுமுகம் (29) என்பவர் சீமாவை ஒருதலையாக காதலித்து வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ள ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார். ஆனால், ஆறுமுகம் சீமாவுக்கு உறவு முறை என்பதால், அவரது காதலுக்கு சீமா மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் 2008 ஜனவரி முதல் தேதி அன்று , சீமா, அவரது வீட்டில் இருந்த போது, அங்கு வந்த ஆறுமுகம், கையில் மறைத்து வைத்திருந்த சல்ப்யூரிக் ஆசிட்டை (கந்தக அமிலம்) சீமா மீது ஊற்றி விட்டார். இதில் படுகாயமடைந்த சீமாவுக்கு, முகத்தின் ஒரு பகுதியும் ஒரு பக்க கண்பார்வையும் பொசுங்கி போனது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆறுமுகத்தை கைது செய்தனர். த்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி குணசேகரன், குற்றவாளி ஆறுமுகத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈடாக சீமாவுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், அந்த தொகையை அவரால் செலுத்த இயலவில்லை என்றால், அவரது சொத்துக்களை வருவாய்த் துறையினர் ஜப்தி செய்து, அதை ஏலம் விட்டு, அந்த தொகையை பாதிக்கப்பட்ட பெண் சீமாவுக்கு வழங்க வேண்டும் என்றும் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் நிகழ்வு உள்ளிட்டவைகளுக்காக இரக்கம் காட்டி ஆறுமுகம் தண்டனையை குறைக்கக்கூடாது என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் இத்தீர்ப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

| < முந்தையது | அடுத்தது > |
|---|




