இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

குழந்தைகள் சானலில் ஆபாச படம்! பெற்றோர்கள் அதிர்ச்சி

E-mail அச்செடுக்க

லாஸ் ஏஞ்சல்ஸ்: மிக பிரபலமான டைம் வார்னர்  என்ற தனியார் டி.வி. நிறுவனம் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்தி வருகிறது.

அதில் குழந்தைகளுக்கு தனியாக ஒரு அலைவரிசையும் மற்றும் நீல படங்களை ஒளிபரப்பும் ஆபாச அலைவரிசைகளும் உண்டு. இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு குழந்தைகளுக்குகான அலைவரிசையில் திடீரென ஆபாச படங்கள் ஓடத் தொடங்கின. தொலைக்காட்சியில் இதை பார்த்து கொண்டிருந்த பல குழந்தைகளும் என்ன ஏதென்று தெரியாமல் விழித்தன. இதனை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு தொலைக்காட்சி நிலையத்துக்கும் தொலைபேசியில் புகார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அத்தொலைக்காட்சி நிறுவனம் உடனடியாக அந்த ஒளிபரப்பை நிறுத்தியது. அந்த தொலைக்காட்சி நிறுவனம் ஆபாச சானலில் ஒளிபரப்ப வேண்டிய காட்சிகளை தவறுதலாக குழந்தைகள் சானலில் ஒளிபரப்பி இருப்பது தெரிய வந்தது. இதற்காக தொலைக்காட்சி நிறுவனம் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: Rajkumar, March 23, 2010
The channal displays the wrong things do childs channel. it is very naughty thing. we should take action to the Private T.V. Channel. The channal's apology is not enough for this.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்