தமிழக அரசின் 2010-2011ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9-30 மணிக்கு புதிய சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய சட்டசபைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் எந்த வழியாக வருவது என்பது பற்றி அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் முதல்-அமைச்சர் கருணாநிதி, துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர், அமைச்சர்கள், துணை சபாநாயகர், எதிர் கட்சி தலைவர், அரசு கொறடா, பொதுப்பணித்துறையால் வாகன அனுமதி சீட்டுடன் வரும் துணைச்செயலாளர் மற்றும் அதற்கும் மேல்நிலை அதிகாரிகள் அண்ணாசாலையில் பெரியார் சிலை முன்பு உள்ள வாயில் வழியாக வருவர்.
எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள வாயில் வழியாகவும், செய்தியாளர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் அனைவரும் வாலாஜா சாலையில் உள்ள வாயில் வழியாகவும் சட்டப்பேரவை வளாகத்தினுள் வருவர்.
இவ்வாறு தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




