பெண்களை இழிவுபடுத்தும் விதத்திலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தடை செய்யக் கோரி இந்து இயக்கங்கள் இணைந்து கோவையில் நேற்று(வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து சமய மகளிர் நல மன்றம், தமிழக தெய்வீக பேரவை, முருக பக்தர்கள் பேரவை, இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனை உள்ளிட்ட இந்து அமைப்புகள் இணைந்து தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்படும் பெண்களைக் கொச்சைப்படுத்தும் படியான நிகழ்ச்சிகளைத் தடை செய்யக் கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
"தொலைக்காட்சிகளில் பெண்களை இழிவுபடுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. அண்மைக்காலமாக இந்து கோயில்கள், வழிபாடுகள் குறித்து தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தடை செய்ய வேண்டும், தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்ப மட்டுமே அனுமதிக்க வேண்டும்" என்பன போன்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஒரு தொலைக்காட்சிப் பெட்டியையும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் உடைத்தனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




