கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய வழக்கு தொடர்பாக, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியைக் கோபி நீதிமன்றத்தில் காவல்துறையினர் நேற்று(வியாழக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார்.
கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமாரை விடுப்பதற்கு, சந்தனக் கடத்தல் வீரப்பன் வாங்கிய பணம் பிறருக்குக் கைமாறியது தொடர்பான வழக்கு கோபி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறையினரால் குற்றம்சாட்டப்பட்டுள்ள வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ராமதிலகம், இம்மாதம் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். கர்நாடக மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ள முத்துலட்சுமியை அம்மாநில காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




