மத்திய அரசில் பணிபுரியும் சுமார் 50 லட்சம் ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் அகவிலைப்படியினை 27% லிருந்து 35 சதவீதமாக உயர்த்திக் கொடுக்கப்பட இருக்கிறது. மத்திய அமைச்சரவை டெல்லியில் இன்று(வெள்ளிக்கிழமை) கூடி இதற்கான முடிவை எடுக்கிறது.
தற்போது அதிகரிக்க இருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது முன்தேதியிட்டு அமலாகிறது. ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்.
நுகர்வோர் விலை குறியீட்டெண், கடந்த ஆண்டு இதே காலத்தில் 10.4% ஆக இருந்தது. இந்த ஆண்டு 16.2% ஆக அதிகரித்திருக்கிறது. இந்த அடிப்படையிலேயே அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போதெல்லாம் தமிழக அரசும் உயர்த்துவது வழக்கம் என்பதால் தமிழக அரசு ஊழியர்களும் ஓய்வூதியர்களும் இதை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் என்று கருதப்படுகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




