2010 - 2010 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, புதிய சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் க.அன்பழகன் வெள்ளிக் கிழமை (19-03-2010) அன்று காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்தார்.3,396 கோடி ரூபாய் பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. மாறாக, பல்வேறு நுகர்பொருள்களுக்கும் வரிக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
மீனவர்கள் பயன்படுத்தும் ஐஸ்கட்டிகளுக்கு வரிச்சலுகை.
இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கு ஓராண்டுக்கு வரிவிலக்கு.
சோற்றுக் கற்றாழை மூலம் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு வரிவிலக்கு.
பாக்குமர இலைத் தட்டுக்கு வரிவிலக்கு.
வீடு கட்டப் பயன்படும் பனைச் சட்டங்களுக்கு வரிவிலக்கு.
கைத்தரியில் பயன்படும் ஜரிகைக்கு கொள்முதல் மற்றும் விற்பனை வரி ரத்து.
திடப்பொருள்களில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு வரிவிலக்கு.
வணிகச் சின்னம் இடப்பட்ட காபித்தூள், மாவு, பொடி, ஈர மாவு ஆகியவைகளுக்கு வரிக்குறைப்பு.
தையல் ஊசி, கத்தரிக்கோல், பட்டன், பெயின்ட் பிரஷ் ஆகியவற்றுக்கும் வரிக்குறைப்பு.
வணிகச் சின்னம் இடப்பட்ட இனிப்பு, கார வகைகளுக்கான வரி 4 வதவீதமாகக் குறைப்பு.
நெல்லுக்கான கொள்முதல் விலை உயர்வு.
7 தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
முக்கிய நிதி ஒதுக்கீடுகள் விவரம் வருமாறு:
இலங்கைத் தமிழர் நலனுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான உதவி நிதி 124 கோடி ரூபாயாக உயர்வு.
முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகைக்கு 1,002 கோடி.
கலைஞர் வீட்டுவசதித் திட்டத்திற்கு 1800 கோடி ரூபாய்.
பெண்கள் திருமண உதவித் திட்டத்திற்கு 300 கோடி ரூபாய்.
இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய்.
ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய்
குடிநீர் வழங்கல் திட்டங்களுக்கு 1183 கோடி ரூபாய்.
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு 600 கோடி ரூபாய்.

இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|