தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் வெள்ளிக் கிழமையன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள கல்வித் திட்டங்கள் வருமாறு:2010-2011 கல்வியாண்டில் 200 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
125 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
தமிழைப் பாடமாகக் கொண்டு பயிலும் மாணவர்கள் தங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள, ரூபாய் 10 கோடியில், 9ஆம் வகுப்பு பயிலும் சுமார் 10 இலட்சம் மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்கப்படும்.
கிராமப்புற மாணவர்கள் கணினி அறிவை வளர்த்துக் கொள்ளும் விதமாய் 2000 நடுநிலைப் பள்ளிகளுக்கு கணினிகள் வழங்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5000 அரசுப் பள்ளிகளில் 85 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 4 அரசுக் கலைக் கல்லூரிகள் மற்றும் 7 தொழில் நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
விழுப்பரத்தில் திருவள்ளுவர் பல்கலைக் கழக பட்ட மேற்படிப்பு விரிவாக்க மையம் உருவாக்கப்படும்.
மதுரையில் அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகம் தொடங்கப்படும். மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழில் நுட்பக் கல்லூரிகளின் கேந்திரமாக இது அமையும்.
அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ., மற்றும் எம்.எஸ்.சி. பயிலும் மாணவர்களுக்கு கட்டணத் தொகை ரத்து செய்யப்படும்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




