தமிழக அரசின் 2010 - 2011ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள விவசாயத் துறைக்கான திட்டங்கள் வருமாறு:விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், திமுக அரசு பதவியேற்ற உடனேயே கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த 7ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருந்தது. கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்படும் இந்த இழப்பை மாநில அரசே ஈடுசெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், 2005-2006ஆம் ஆண்டு 1097 கோடி ரூபாயும், 2006-2007ஆம் ஆண்டில் 1250 கோடி ரூபாயும், 2007-2008ஆம் ஆண்டில் 1571 கோடி ரூபாயும், 2009-2010ஆம் ஆண்டில் 2013 கோடி ரூபாயும் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்டது. 2010-2011ஆம் ஆண்டில் 2500 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக வழங்கப்படும்.
பயிர்கடனை முறையாகத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளின் வட்டியை ரத்து செய்து 2009-2010ஆம் ஆண்டில் தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு 140 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்காக 240 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கரும்புக்கான விலை டன்னுக்கு 2000 ரூபாயாக உயர்த்தப்படும். கடந்த ஆண்டு இது 1650 ரூபாயாகவும், திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன் இது 1014 ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத் தக்கது.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக தமிழக மின்வாரியத்திற்கு இழப்பீட்டுத் தொகை 295 கோடி ரூபாய் வழங்கப்படும்.
நிலமற்ற விவசாயிகளின் நலன் சார்ந்த திட்டங்களுக்காக 152 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் ஆவின் பால்பண்ணை 27 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்படும்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




