தமிழ அரசின் 2010 - 2011 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் அன்பழகன் வெள்ளிக் கிழமை (19-03-2010) அன்று தாக்கல் செய்தார். இந்தக் கூட்டத்தை அதிமுகவினர் புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர்.தமிழக சட்டமன்றம் புதிய வளாகத்தில் முதன்முறையாக இன்று கூடியது. முதல் நாளான இன்று தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் 2010-2011ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
நிதிநிலை அறிக்கையை அமைச்சர் அன்பழகன் வாசிக்கத் தொடங்கியதும், கருப்பு உடையணிந்து சட்டமன்றத்திற்கு வந்திருந்த அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிட்டனர். புதிய சட்டமனற்த் திறப்பு விழாவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முறையான அழைப்பு வழங்கப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என்று கூறி கோஷமிட்டனர். இதனால் அவையில் அமளி நிலவியது. இதனை அடுத்து, அதிமுக உறுப்பினர்கள் அவையில் அமைதியாக அமருமாறும், இல்லையெனில் அவையை விட்டு வெளியேறுமாறும் எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்புக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக உறுப்பினர் ஓ. பன்னீர் செல்வம், தமிழக சட்டமன்றத்திற்கும், தலைமைச் செயலகத்திற்கும் சொந்தக் கட்டிடம் வேண்டும் என்று முதலில் திட்டம் தீட்டிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத் திறப்பு விழாவுக்கு முறையாக அழைப்பு விடாததைக் கண்டித்தும், அத்திவாசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று கூறினார்.
புதிய சட்டமன்றத்தின் முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதா இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




