இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

எச்.ஐ.வி தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்னணி!

E-mail அச்செடுக்க

மதுரை: தமிழ்நாட்டில் சென்ற 2007ம் ஆண்டு  ஹெ.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பின்படி 1.84 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி., பாதிப்பு இருக்கிறது  என, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்க திட்ட இயக்குனர் சம்பு கலோலிகர் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது..

எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏ.ஆர்.டி., மையங்கள் மூலம் இலவச கூட்டு மருந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில், 37 மையங்கள் செயல்படுகின்றன. 2009ம் ஆண்டு அக்டோபர் இறுதி வரை 40 ஆயிரம் எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளவர்கள், கூட்டு மருந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இதுதவிர 46 கூடுதல் மையங்கள் தாலுகா அளவில் செயல்படுகின்றன. எச்.ஐ.வி., பரவாமல் தடுப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது.

பெண்கள் மூலம் குழந்தைக்கு எச்.ஐ.வி., பரவும் விகிதம் 1.6 சதவீதமாக இருந்தது. தற்போது 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டது. சேலத்தில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். நாமக்கல், திருச்சி, கரூர், சென்னை போன்ற மாவட்டங்களிலும் எச்.ஐ.வி., நோயாளிகள் உள்ளனர். இந்நோயாளிகளுக்கு சட்ட உதவிகள் வழங்க, 16 அரசு மருத்துவமனைகளில் சட்ட உதவி மையங்கள் செயல்படுகின்றன. இவ்வாறு சம்பு கலோலிகர் கூறினார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்