விமானக் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் வெள்ளிக் கிழமையன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அம்பிகா சோனி அமைச்சரவைக் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
விமானக் கடத்தல் தொடர்பாக சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் மற்றும் இணைக்க வேண்டிய புதிய அம்சங்கள் குறித்து ஆராய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின்படி, இச்சட்டத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளத் திட்டமிடப் பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் படி, விமானக் கடத்தல் தொடர்பான குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்க முடியும். விமானத்தைக் கடத்தி பயணிகளை பிணைக் கைதிகளாக வைப்பதற்கும், விமானத்தை வெடிகுண்டாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் இச்சட்ட திருத்தம் வகை செய்யும் என்று கூறினார்.
இந்தச் சட்ட திருத்தம் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும் எதிர்பார்க்கப் படுகிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




