டெல்லி டேர் டெவில்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 185 ரன்களை எடுத்திருந்தது. வீரேந்தி சேவாக் 74 ரன்களும், மிதுன் மன்ஹாஸ் 32 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் மாத்யூ ஹைடன் 93 ரன்களும், கேப்டன் சுரேஷ் ரெய்னா 49 ரன்களும் எடுத்தனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் இரு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் உள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




