இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கைவிடப்படும் காவல் பல்கலைக் கழகத் திட்டம்

E-mail அச்செடுக்க
தற்போதுள்ள பல்கலைக்கழகங்களில் படிப்பு மையங்கள் மற்றும் இருக்கைகளை தொடங்குவதால் ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டு தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டத்தை கைவிட மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.

முழுமையான அளவில் தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஏற்கனவே அதற்கான வசதிகள் உள்ள பகுதிகளில் கூடுதல் செலவாகும். அதற்கு பதிலாக தற்போதுள்ள பல்கலைக்கழகங்களில் காவல் துறை தொடர்பான படிப்புகளை அறிமுகப்படுத்துவது சிறந்த மாற்றுத் திட்டமாக கருதப்பட்டது. அதன் காரணமாகவே தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் ஏற்படுத்தும் முடிவை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் அமைக்க ரூ.300 கோடி செலவாகும் என்று திட்டமிடப்பட்டது. அத்துடன் ஆண்டுக்கு ரூ.25 கோடி தொடர் செலவாகும். இந்த திட்டத்திற்கு கொள்கை அடிப்படையில் 2008-ம் ஆண்டு மே மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்