இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஐபிஎல் III : 6 ரன்னில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வி!

E-mail அச்செடுக்க

கட்டாக் பாரபதி மைதானத்தில் டெக்கான் சார்ஜர்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய பரபரப்பான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியது.

 

முதலில் பேட் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் 33 ரன்களும் , சைமண்ட்ஸ் 53 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 164 ரன்களே எடுக்க முடிந்தது. 68 ரன்கள் சேர்ப்பதற்கும் 6 முன்னணி விக்கெட்களை இழந்த   பஞ்சாப் அணி இர்பான் பதானின் அதிரடியால் 164 ரன்கள் சேர்த்தது. இர்பான் பதான் 29 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார்.

சைமண்ட்ஸ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இன்னும் வெற்றிக் கணக்கை துவங்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்