இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பாரதி ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ஐஃபோன் 3ஜிஎஸ் சேவை!

E-mail அச்செடுக்க
பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் ஐஃபோன் 3ஜிஎஸ் சேவையை வழங்க ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியிருப்பதாக அறிவித்திருக்கிறது. புத்தம் புதிய ஐஃபோன்கள் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என ஏர்டெல் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர்தான் பாரதி நிறுவனம் 3ஜி அலைவரிசைக்கான ஏலத்தில் கலந்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏலத்தில் வெல்லும் நிறுவனம் செப்டம்பர் முதல் இந்தியாவில் 3ஜி சேவையை வர்த்தக ரீதியில் அறிமுகப்படுத்த அனுமதிக்கப்படும்.

இப்புதியச்சேவை வெகுவேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்தியத் தொலைத் தொடர்புத் துறைக்கு ஒரு கூடுதல் தூண்டு சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்