இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த மிகப்பெரும் இனப் படுகொலையாக போஸ்னியா ஸ்ரேப்றேநிச்சா படுகொலைகள் வரலாற்றில் குறிக்கப்படுகின்றன. போஸ்னியாவில் பலியானவர்களின் விவரங்களை செயற்கைக் கோள் படங்களின் வழியாக உலகம் தெரிந்து கொண்டது. கண்டெடுக்கப் பட்ட உடல்கள் தங்களுடைய உறவினர் களுடையதா? என அறிந்துகொள்ள மரபணு சோதனைகள் செய்யப்பட்டன.
தோண்டப்பட்ட உடல்கள் மீண்டும் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டன. இதை அடுத்து இந்தப் படுகொலை களுக்கு காரணமான வன்கொலையாளி கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சர்வதேச காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. முன்னாள் செர்பிய அதிபர் சுலோபதன் மெலோசெவிக் கைது செய்யப்பட்டான். தொடர்ந்து சிறையில் தண்டனை நாட்களைக் கழித்து வந்த சுலோபதன் மிலோ செவிக் சிறையிலே இறந்தான்.தற்போது இந்த இனபடுகொலையின் போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த நெதர்லாந்து படைவீரர்களில் பலர், பகிரங்கமான 'ஹோமோ' செக்ஸ் எனப்படும் ஒரு பால் உறவு கொண்டவர்களாக (ஆணும், ஆணும் உடல் உறவு கொள்வது, அல்லது பெண்ணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் அருவருத்தக்க செயல்) இருந்ததுதான் அந்தப் படுகொலைகள் தடுக்கப்படாமல் இருந்ததற்கு காரணம் என அமெரிக்காவின் முன்னாள் நேட்டோ கமாண்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
போரின் போது ராணுவ படையினர் ஒரு பால் உறவு போன்ற பல கேடான வழிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்ததால், அவர்கள் காமகளியாட்டங்களில் ஈடுபட்டு போருக்குக்கான சுழலில் தயாராகமல் இருந்தனர் என்பதாக அமெரிக்க செனட் குழுவொன்றின் முன்னிலையில் ஜோன் ஷீஹான் என்ற அமெரிக்காவின் முன்னாள் நேட்டோ கமாண்டர் ஒருவர் கூறியிருந்தார்.
ஆனால் இதை டச்சு அரசாங்கம் நிராகரித்துள்ளது. மேலும் இதுவரை போஸ்னியா படுகொலைகள் தொடர்பான எந்த விசாரணையும் ஒருபால் உறவுக்கார படைவீரர்களை தொடர்புடைய குற்றச்சாட்டு வைக்கவில்லையென டச்சு பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




