இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தண்ணீர் பொட்டலங்கள் விற்பனைக்கு தடை!

E-mail அச்செடுக்க

waterராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பொது இடங்களிலும் கடைகளிலும் பாலிதீன் பைகளில் விற்கப்படும் தண்ணீர் பொட்டல விற்பனைக்கு தடை விதிக்கப் பட்டது. ராமேஸ்வரம் தீவுப்பகுதியை கடந்த 2002 ல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து, பாலிதீன் மற்றும்  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

ராமேஸ்வரம் வருவாய், நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் நுகர்வோர் அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம், கண்காணிப்பு என பல்வேறு நடவடிக்கைகளின் பயனாய், தற்போது 80 சதவீதம் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது. இந் நிலையில், டாஸ்மாக் பார், சிறிய கடைகளில் அதிகளவில் தண்ணீர் பொட்டலங்கள் விற்கப் படுவதால், இதற்கும் தடை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., இளங்கோ தலைமையில் நடந்த பாலிதீன் விழிப்புணர்வு கூட்டத்தினை தொடர்ந்து, பாலிதீன் பைகளில் ஆடு, கோழி இறைச்சி விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. நகராட்சி கமிஷனர் போஸ், துணை தாசில்தார் இளங்கோ, துறைமுக காப்பாளர்கள் சந்திரன்(ராமேஸ்வரம்), குப்புசாமி(பாம்பன்), உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்