இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் வெற்றி!

E-mail அச்செடுக்க

அஹ்மதாபாத்தில் உள்ள சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிக் கணக்கை துவங்கியது.

 

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. சுஜ்ஜன்வாலா 45 ரன்களும், வோஜஸ் 37 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வெற்றி இலக்கை எட்ட முடிய வில்லை. அந்த அணி  20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது. ஹாட்ஜ் 36 ரன்களும், கங்குலி 33 ரன்களும் எடுத்தனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்