இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

போர்வைக்குள் அத்துமீறிய ஒருவன்

E-mail அச்செடுக்க

பிட்ஸ்பர்க், அமெரிக்கா - ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவன் ஒருவன் அங்கு உறங்கிக் கொண்டிருந்த அந்த வீட்டு உரிமையாளரின் போர்வைக்குள் புகுந்து படுத்தக்கொண்ட விசித்திர சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

ஃபராங்க் ஃபோன்டனா (Frank Fontana) என்பவர் தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 5:30 மணியளவில் அவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 33 வயது மனிதன் ஒருவன் அவரது கட்டிலில் ஏறி அவர் போர்வைக்குள் புகுந்துக் கொண்டான். அவரது காதலியிடம் வீட்டின் சாவி ஒன்று உள்ளது. அவர் தான் வந்துள்ளார் என்று நினைத்துப் பேச்சுக் கொடுத்துள்ளார் ஃபராங்க். ஆண் குரலில் பதில வரவே பதறிப்போனவர், பேஸ்பால் மட்டையை தற்காப்பிற்கு எடுத்துக் கொண்டு காவல் துறைக்கு உடனே தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த காவலர்கள் அந்த மனிதனைக் கைது செய்துள்ளனர்.

முந்தைய இரவு ரேப் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று விட்டு, குடித்துப் போதை ஏறியுள்ளது அந்த மனிதனுக்கு. இரவு மிகுந்த குளிராய் இருந்திருக்கிறது. இந்நிலையில் தங்குவதற்கு இடம் தேடி அலைந்த அந்த மனிதன் அவர் வீட்டிற்குள் நுழைந்து படுத்துக் கொண்டான். விசாரனையில் அவன் இதைத் தெரிவித்ததாக காவலர் தெரிவித்தனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்