ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலம் பகுதியில் யூதக்குடியிருப்புகளை நிறுத்துதலோ அல்லது யூதக்குடியிருப்பு நிர்மாணிப்பதில் ஏதும் விட்டுக் கொடுத்தலோ பேச்சளவில் கூட இஸ்ரேலின் புறத்திலிருந்து அறவே இல்லை என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ திட்டவட்டமாகக் கூறி இருக்கிறார்.
மத்தியகிழக்கு அமைதிக்கான நான்கு உறுப்பினர் குழுவில் முடிவு செய்யப்பட்ட பாலஸ்தீன நாடு அமைப்பது ஒன்றே மத்தியகிழக்கின் நிரந்தர அமைதிக்கான தீர்வாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்தும், ஐநா பொதுச் செயலாளர் பான் கி-மூன் காஸா பகுதியில் இஸ்ரேலின் அட்டுழியங்கள் மிகவும் கொடூரமானவை என்று அறிவித்ததை அடுத்தும் இஸ்ரேலின் பிரதமர் இவ்வாறு அறிவித்திருப்பது இஸ்ரேல் பன்னாட்டு நன்னடத்தைகளை மதிக்கவில்லை என்பதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
தனது திட்டவட்டமான முடிவைத் தெரிவித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டனுக்கு விளக்கமான கடிதம் அனுப்பப் போவதாக நெதன்யாஹு தெரிவித்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




