கொல்கத்தாவில் உள்ள பூங்கா தெருவில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் இன்று மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் பலியாகி இருக்க கூடுமென அஞ்சப்படுகிறது. இது ஒரு குடியிருப்பு கட்டிடம் ஆகும்.
இந்த அடுக்கு மாடி கட்டிடத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது தளங்களில் மதியம் 2 மணிக்கு தீ பிடித்துள்ளது. கட்டிடத்தின் சில பகுதிகள் இடிபடும் நிலையிலுள்ளது. தீ அணைப்பு வீரர்கள் தீயிடுன் போராடி அணைக்க முயன்று வருகின்றனர். கட்டிடத்தின் உள்ளே இருக்கும் மக்களை காப்பாற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த பகுதியினை காவல்துறையினர் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




