இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மூளை ஷார்ப்பாக பல மொழி படியுங்கள்!

E-mail அச்செடுக்க

 

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருப்பவர்களின் மூளை சுறுசுறுப்பாக இயங்குவதாக புதிய ஆய்வுத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உளவியல் மற்றும் அறிவியல் கூட்டமைப்பு இதழில் சமீபத்தில் ஓர் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. "இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருக்கும் குழந்தைகள் மிக எளிதாகப் பிரச்னைகளுக்கு முடிவு கண்டுவிடுகின்றனர்" என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

மேலும், "குறிப்பாக வளரும் இளம் பருவத்தில் இரண்டாவது மொழி தெரிந்திருந்தால் அது தாய்மொழி நடையில் பாதிப்பை ஏற்படுத்தும். பல்வேறு வார்த்தைகள் தெரிந்திருப்பதால் சொன்ன வார்த்தைகள் திரும்பவும் வராது. தாய்மொழியில் வார்த்தையைத் தேடும் போது இருக்கும் வேகத்தை விட, இரண்டாவது மொழி தெரிந்திருப்பவரின் மூளை இன்னும் வேகமாக வார்த்தைகளைத் தேடும். தாய்மொழியில் வாசித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது மொழியின் வார்த்தைகளும் நினைவில் ஊடாடும்.

ஒன்று அல்லது இரண்டு மொழிகள் பேசுபவரிடமிருந்து பல மொழிகள் பேசுபவரை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும். மேலும் இவர்களின் மூளைச் செயல்பாடுகளிலும் வித்தியாசம் காணப்படும். குறிப்பாக இந்தியாவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக் கொள்ளும் வகையில் கல்வி முறை அமைந்துள்ளது.

சிறுவயதிலேயே இரண்டு மொழிகளில் பேசவும் எழுதவும் கற்பிக்கப்படுகிறது. இதுபோன்று இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருப்பதால், சிறுவயதிலிருந்து முதுமை வரை பல நலன்கள் கிடைக்கின்றன.

ஏழு அல்லது எட்டு வயதில் வேறு மொழியைப் பயில ஆரம்பித்தால் அதைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் போலவே குழந்தைகள் பேசி எழுத முடியும். அதேபோல் வயதான காலத்தில் ஏற்படும் புத்தி தடுமாற்றம் போன்ற நோய்களும் தாக்காது" என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, "உங்கள் குழந்தைக்கு ஒன்றுக்கு மேலான மொழிகள் தெரிந்திருக்கிறதா? நிச்சயம் அதன் மூளை படு சுறுசுறுப்பாக இருக்கிறது" என்று அறிந்து கொள்ளுங்கள்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்