பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் படை மற்றும் சிறப்பு ஆயுதப்படை முகாம் மீது 1000க்கும் அதிமான ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் வெள்ளிக் கிழமை இரவில் தாக்குதல் நடத்தினர்.வெள்ளிக் கிழமை இரவு 8.30 மணிக்கு கயா மாவட்டம் லூட்வா வனப் பகுதியில் அமைந்துள்ள முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் உடனடியாக பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடங்கள் இந்தப் பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக பாதுகாப்புப் படைத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
இத்தகவல் கிடைத்ததும் பீகார் இராணுவக் காவல், மத்தியப் பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு துணைக் காவல் படையினர் நிகழ்விடத்திற்குச் சென்று மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




