மாவோயிஸ்டுகள் கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்ததில் பத்து பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர் என காவல்துறை கூறியுள்ளது.ஒரிசா மாநிலத்தில் கோரபூட் மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை (04-04-2010) காலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. மல்காங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் கோரபூட் மாவட்டத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது தங்கினிகுடா என்ற இடத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
காயமுற்ற படையினர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிகழ்விடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நிகழ்விடத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சன்டை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




