இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நக்சலைட்கள் அட்டூழியம் 70 போலீசார் பலி

E-mail அச்செடுக்க
பீகார், ஒரிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் நக்சல்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனர். இந்த நக்சல்களை ஒழிக்க மத்திய ஏற்படுத்திய திட்டக்குழு கீரின் ஹன்ட், இதன் மூலம் இவர்கள் மீது கடும் தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் நக்சல்கள் ஆத்திரம் அடைந்துள்ளதால், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பீகார், ஒரிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சட்டீஸ்கரில் நக்சல்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் சி.ஆர்.பி.எப். போலீசார் 70 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர், மேலும் பலர் காயமுற்றுள்ளனர். வனப்பகுதிச் சாலையில் ரோந்துப் பணியை முடித்துவிட்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள் இன்று காலை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மலையின் உயரமான பகுதிகளில் இருந்து போலீஸ் வாகனத்து நக்சலைட்கள் சுற்றி வளைத்துத் தாக்கியதாகத் தெரிகிறது. அவர்கள் போலீஸ் வாகனத்தை நோக்கிச் சரமாரியாகச் சுட்டதாகவும், வெடிகுண்டுகள் வீசித் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட நக்சல்கள் கூட்டமாக வந்து பயங்கர ஆயுதங்கள் கொண்டு எதிரே சென்று கொண்டிருந்த திடீர் தாக்குதல் நடத்தினர். பலர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. மேலும் பாதுகாப்பு படையினரின் வாகனமும் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. தொடர் சண்டையில் பல இடங்களில் கண்ணி வெடிகளை வெடிக்க செய்தனர். காட்டுப்பகுதிக்குள் பயங்கர தீ பற்றி எரிகிறது. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் மற்றும் கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் கண்மூடித்தனமான, காட்டு மிராண்டித்தனம் என்று கண்டன தெரிவித்துள்ள அவர், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் நக்சலைட்டுகளின் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
நுனிப்புல்