இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பதவிகளுக்காக மு.கா. சோரம் போகாது - ஹக்கீம்

E-mail அச்செடுக்க
நாங்கள் இந்த நாட்டில் ஒரு பலம்வாய்ந்த கட்சியாகவுள்ளோம். சிறுபான்மை மக்களுக் காகவே நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகிறோம். வெறும் பதவிகளுக்காகச் சோரம்போக மாட்டோம். எவரும் கண்ணி யமான முறையிலேயே எம்முடன் பேசவேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சிறுபான்மைச் சமூகங்களையும் அணைத்துக் கொண்டே சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்குமான நோக்கத்தில் ஜனாதிபதி சிறுபான்மைக் கட்சிகளுடன் பேசவேண்டுமென்றால் அதனை நாம் வரவேற்போம்.அத்துடன் பதிவிகளுக்காக எமது கட்சி ஒருபோதும் சோரம் போகவும்மாட்டாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இதனை விடுத்து அவர்களது தேவைகளுக்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் எம்மை இணைத்துக் கொண்டு கறிவேப்பிலையாகப் பயன்படுத்த லாமென அவர்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பலம் வாய்ந்த கட்சி. அது தனது சுய கௌரவத்தை ஒருபோதும் இழக்கமாட்டாது.

இதுவரை வெளியிடப்பட்ட எமது தேர்தல் வெற்றியைப் பொறுத்துக் கொள்ளாதவர்கள் எமது கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். நாளை மறுதினம் நடை பெறவுள்ள மீள்வாக்களிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் எனக்கு வாக்களிக்காமல் செய்வதற் கான ஒரு முயற்சியாகவுமே இதனைப் பார்க்கிறேன்.

ஜனாதிபதியோ, ஆளும்தரப்பினரோ அரசாங்கத்தில் எம்மை இணைந்து கொள்ளுமாறு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இந்த நிலையில் எமது கட்சியை அரசுடன் சேருமாறு அழைக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தியின் பின்னணியில் ஒரு சதிமுயற்சி இருப்பதாக நான் கருதுகிறேன்.

கண்டி மாவட்டத்தில் மீள்வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், அந்த மாவட்ட மக்கள் மத்தியில் எனது செல்வாக்கை இல்லாமல் செய்து என்னைப் பின்னடையச் செய்வதற்கு அல்லது தோல்வியடைய வைப்பதற்கானதொரு சூழ்ச்சியாகவே இதனைக் கருதுகிறேன்.

எம்மை ஏளனப்படுத்தவும், மலினப்படுத் தவுமே இவ்வாறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக எமக்குக் கிடைக்கக் கூடிய இரண்டு தேசியல் பட்டியல் எம்.பிக்களை இல்லாமல் செய்து ஐக்கிய தேசியக் கட்சியை எம்முடன் முரண்பட வைக்கும் சதியும் இந்த விவகாரத்தில் அடங்கியுள்ளது  என்றார்

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்